வருடம் பல கடத்தி
தனிமைச் சோர்வு நிரப்பி
சந்தித்துக் கொண்டோம்-
ஒரு இலையுதிர் மாலையில்
காலச்சக்கரத்தில் ஒன்றாய்
இணைந்த இரு முள்களாக.
சந்தித்துக் கொண்டோம்-
ஒரு இலையுதிர் மாலையில்
காலச்சக்கரத்தில் ஒன்றாய்
இணைந்த இரு முள்களாக.
தனிமைப் பயணத்தின்
அசதியை போக்கிக் கொள்ள
நம் இருப்பு இல்லாது
தொலைந்து போன
பிரியங்களை மீட்டுக்
கொணரும் முயற்சியாக
இருவரும் புன்முறுவலைச்
சிந்தி அவ்விடத்தை
பூக்களில் நிரப்பினோம்.
அசதியை போக்கிக் கொள்ள
நம் இருப்பு இல்லாது
தொலைந்து போன
பிரியங்களை மீட்டுக்
கொணரும் முயற்சியாக
இருவரும் புன்முறுவலைச்
சிந்தி அவ்விடத்தை
பூக்களில் நிரப்பினோம்.
காலத்தை மறைக்கலாம்
என்றாய் - மறக்கலாம் என்றேன்
சாய்ந்து கொள்ள தோளொன்று
தேவைப்படுவதென சொன்னாய்
படுத்துக் கொள்ள மடியொன்று
கிடைத்தால் வசதியெனச் சொன்னேன்.
என்றாய் - மறக்கலாம் என்றேன்
சாய்ந்து கொள்ள தோளொன்று
தேவைப்படுவதென சொன்னாய்
படுத்துக் கொள்ள மடியொன்று
கிடைத்தால் வசதியெனச் சொன்னேன்.
சொரியும் கண்ணீரைத்
துடைத்து விட கரமொன்று
வேண்டுமென்றாய் - மாலை
வேளை புன்னைமர
மஞ்சள் பூக்களோடு உறவாடப்
பெண் தேவை என்றேன்.
நீளும் சாலையில் ஆண் கரம்
பற்றி கர்வத்தோடு நடக்க
வேண்டுமென்றாய்-பைக்கின்
பின்புறம் என்மீது சாய்த்துக்
கொண்டு நகரவீதிகளை
பற்றி கர்வத்தோடு நடக்க
வேண்டுமென்றாய்-பைக்கின்
பின்புறம் என்மீது சாய்த்துக்
கொண்டு நகரவீதிகளை
வலம் வர வேண்டுமென்றேன்.
கனவுச் சஞ்சரிகையில்
மூழ்கித் திளைத்த என்னை
எழுப்பி விட்டு நன்றி சொல்லி
நகர்ந்தாய் - ஒரு நாடகத்துக்கான
ஒத்திகை முடிந்த திருப்தியோடு.
முள்கள் சுழலத்தொடங்கின
காலப்பெட்டிக்குள் எவ்வித
பிரிதல் வருத்தமுமின்றி.
மூழ்கித் திளைத்த என்னை
எழுப்பி விட்டு நன்றி சொல்லி
நகர்ந்தாய் - ஒரு நாடகத்துக்கான
ஒத்திகை முடிந்த திருப்தியோடு.
முள்கள் சுழலத்தொடங்கின
காலப்பெட்டிக்குள் எவ்வித
பிரிதல் வருத்தமுமின்றி.
-சோமா (Thanks to Thinnai.com)
No comments:
Post a Comment