கனத்து இறுகி நிற்கும்
மண் அடுக்குகளின்
நெற்றியில் முத்தமிட்டு
புறப்படும் காதல்
வெக்கையில் தன்
கூடலை இயம்புகின்றன
ஆணிவேர்கள்.
காதலியின் நெகிழ்வில்
நுனிதாய் சிறிதாய் பெரிதாய்
தன் கிளைகள் பரப்பி
காதலியின் ஆழம் நோக்கி
அவைகளின் இடங்களை
ஆக்கிரமிக்கின்றன.
காதலியின் இரத்தம்
உறிஞ்சி தாகம் தீர்த்து
மேனி சுவைத்து
உடல் பெருத்து
வாழ்நாளை நீட்டித்துக்
கொண்ட கர்வங்களை
சேர்த்து வைக்கின்றன
வேர் முடிச்சுகளில்.
புத்தனாய் புன்முறுவல்
தறித்து காலத்தின்
திசை நோக்கி தவம்
புரிகிறாள் காதலி
துரோகவேர்களைத்
திங்கும் காதலிகள்
உயிர்ப்பு கொள்கிறார்கள்.
-சோமா
No comments:
Post a Comment